காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது: ஐ.நா மீண்டும் எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் காசாவில் பஞ்சம் நெருங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரித்துள்ளது.

அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் சுத்தமான குடிநீரின்றி சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் மேற்கொண்டது. இதன்போது எல்லை பகுதியில் இசை கச்சேரியில் பங்கேற்றிருந்த இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர்.

பெண்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்திகளும் வெளியாகின. சில பெண்கள் நிர்வாணமாக வாகனத்தில் இழுத்து செல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

அன்று ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் செய்தார். இந்நிலையில் ஒரு வருடமாகியும் போர் தொடர்கின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை அண்மித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கைஒரு லட்சத்தைக் கடந்தது.

எவ்வாறாயினும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய, இஸ்ரேல் பணய கைதிகள் சிலரை மீட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

பணயக் கைதிகள் தொடர்பில் அறியத்தருவபர்களுக்கு சன்மானங்களையும் அறிவுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin