வெறும் 42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 7 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 149 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
முன்னதாக ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1994ஆம் ஆண்டு 71 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin