ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்களை ரஷ்யா இராணுவத்தின் கொத்தடிமைகளாக இணைத்தமை அம்பலத்துக்கு வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாக முகவர்கள் பணத்தை பெற்றுள்ளனர்.
அதன் பிரகாரம் ரஷ்யா மற்றும் ரோமேனியா நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரை மார்க்கமாக ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அனுப்புவதாக மூன்று இளைஞர்களை கட்டுநாயக்கா விமான நிலைய ஊடாக ஏற்றியுள்ளனர்.
இவ்வாறு ஏற்றப்பட்ட மூன்று இளைஞர்கள் ரஷ்ய நாட்டில் இறக்கப்பட்டு அங்கு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
ஏன் தங்களை இராணுவ அழைத்துச் செல்கின்றது என கேள்வி எழுப்பிய இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பதில் பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உங்களுக்கு ரஷ்ய நாட்டின் ராணுவ பயிற்சியை வழங்கிய பின்னர் உங்களுக்கு வேலை தரப் போகிறோம் என முகவர்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர்களை மறைவான இடம் ஒன்றில் தங்க வைத்து ராணுவ பயிற்சிகளை வழங்கி ரஷ்யா உக்ரேன் போர்க்களத்துக்கு அவர்களை அடிமைகளாக சேவகம் செய்வதற்காக ரஷ்யா இராணுவம் அழைத்துச் சென்றமையை அவர்கள் தமது குடும்பத்துக்கு தெரியப்படுத்தியுள்ளன.
தாம் தவறான ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறோம் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என குரல் பதிவுகளை தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.