எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரையிலான காலப்பகுதிக்குள் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படும் நிலை காணப்படுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நீர்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் அதிக மழை வீழ்ச்சியின காரணமாக ஹெட ஓயாப் பள்ளத்தாக்கின் லாஹீகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உரித்தான ஹெட ஓயாவினைச் சுற்றியுள்ள தாழ் நிலப் பிரதேசங்களுக்கு தற்பொழுது முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாவலி கங்கையின் சில நீரேந்துப் பிரதேசங்களுக்கு நேற்று இரவு முதல் கிடைக்கப்பெற்று வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக திம்புலாகல, கச்சலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோரளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட தாழ்நில பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதலால், மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களிடத் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமைகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு உரிய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.