நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்று நிருபத்திற்கமைய வாக்குப்பெட்டி, வினியோகம், மீள பொறுப்பேற்றல், தேர்தல் தினத்தன்று கடமை, வாக்கெண்ணும் கடமை என்பவற்றுக்காக மூன்று வகுதிகளின் கீழ் கொடுப்பனவு மேற்கொள்ளப்படும்.
தேர்தலுக்கு முதல்நாள் வாக்குப்பெட்டி விநியோகக்கடமையில் ஈடுபட்டோருக்கு;
உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2000 ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 1600 ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 1250 ரூபா உதவியாளருக்கு 1000 ரூபா வழங்கப்படும்.
தேர்தல் தினத்தன்று கடமையில் ஈடுபட்டோருக்கு;
வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 6000 ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 6,000 ரூபா, மேலதிக தலைமை தாங்கும் அலுவலருக்கு 5,000 ரூபா, விசேட, மேலதிக, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3500 ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250 ரூபா, உதவியாளருக்கு 3000 ரூபா வழங்கப்படும்.
வாக்கெண்ணும் கடமையில் ஈடுபட்டோருக்கு பிரதம வாக்கெண்ணும் அலுவலருக்கு 15,000 ரூபா பிரதி வாக்கெண்ணும் அலுவலருக்கு 12,000 ரூபா, உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 10,000, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 6,000 ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4,000 ரூபா உதவியாளருக்கு 3000 ரூபா வழங்கப்படும்.
இது தவிர இணைந்த படியாக ஆகக்குறைந்தது 1500 ரூபாவும் ஆகக்கூடுதலாக 5000 ரூபாவும் வழங்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.