வைத்தியர் அர்ச்சுனாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு!

வைத்தியர் அர்ச்சுனாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

முகநூல் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை விசாரிப்பதற்காக சிவில் ஆர்வலர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துக்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது,

இருப்பினும் யாழ்.மாவட்ட சுயேட்சை உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.

இதன்போது பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார், மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்து கொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து சுயேட்சைக்குழு இல. 17 ஐ பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

Recommended For You

About the Author: admin