கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இரத்த
பலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக அவுஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது, அவுஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதை கண்டிக்கும் வகையில் நடப்பாண்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை புறக்கணிப்போம் என்று சமூக ஊடகங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனிடையே, போர்க் ஸ்டீரிட் வணிக வளாகத்தில் உள்ள ரீடெயில் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மியர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை தொடங்கத் திட்டமிட்டிருந்தது. இது குறித்து அறிந்த போராட்டக்காரர்கள் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வணிக வளாகத்துக்கு வெளியே போராட்டங்களையும் நடத்தினர். எங்களது போராட்டம், அமைதியான, வன்முறையற்ற போராட்டமாக தொடரும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்திருந்தார்.