பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் அந்நாட்டு நிதிப் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
பங்குச் சந்தையை கையாள்வது மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக ஷகீப், அவரது மனைவி உம்மி அஹமது ஷிஷிர் மற்றும் அவரது வர்த்தக நிறுவனங்களின் அனைத்து வங்கிக் கணக்கு விபரங்களையும் நிதிப் புலனாய்வுப் பிரிவு கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி கோரியிருந்தது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து அரசின் அறிவுறுத்தலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷகீப் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார்.
மேற்கிந்திய தொடரையும் அவர் இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதோடு அவர் மீண்டும் பங்களாதேஷ் அணிக்காக ஆடுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும் ஷகீப் கடந்த செப்டெம்பர் பிற்பகுதியில் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் அறிவித்திருந்தார்.
ஷகீப் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் போராட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி இருந்தார்.
மக்கள் போராட்டத்தை அடுத்து பாராளுமற்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்கும் ஷகீபுக்கு எதிராக கடந்த ஓகஸ்டில் கொலை வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டுள்ளது.