பூமணி அம்மா அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய்கள் அமைப்பினரால்  யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரில் உள்ள றிம்மர் மண்டபத்தில்,மாணவர்களுக்காக நடத்தப்பட்ட, தலைமைத்துவம்,எதிர்கால    வழிகாட்டல்,போதைப்பொருள்,உளவியல் சார்ந்த ஒரு நாள் வழிப்புணர்வு பயற்சி நெறியில் பங்கு கொண்ட நூறு மாணவர்களுக்கும் வளவாளர்களுமாக மொத்தம் நூற்றி நாற்பது பேருக்கு உணவு வழங்கி உதவும்படி வடக்கு மாகாண சபையின் யாழ்.மாவட்ட முன்னாள் உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளருமான N.விந்தன் கனகரட்ணத்திடம் யாழ்ப்பாணம் பழைய மாணவச் சிப்பாய்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் யாழ்.புனித சம் பஸ்த்திரியார் கல்லூரியின் உயர்தர வகுப்பு தொழில் நுட்ப்ப பிரிவு ஆசிரியருமான எஸ்.கஜவதனன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு,சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா அவர்களால் ரூபா எண்பதினாயிரம் வழங்கி,பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக மாணர்களுக்கும் வளவாளர்களுக்கும் எம்மால் இன்று உணவு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய பயிற்சி பாசறைக்கான உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு.விசுவாசம் செல்வராசா அவர்களும் அறக்கட்டளையின் நிர்வாகிகளான ந.விந்தன் கனகரட்ணம்,ஆலோசகர் இ.மயில்வாகனம்,இலங்கை யாழ்.கிளைத் தலைவர், தனேந்திரம்,நிர்வாக சபை உறுப்பினர்,திருமதி நிர்மலா மகேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வைத்தனர்.அத்தோடு யாழ்ப்பாணம் பழைய மாணவச் சிப்பாய்கள் அமைப்பினரால் ஸ்தாபக தலைவர்,திரு விசுவாசம் செல்வராசா அவர்களுக்கு “ஈழத்து ஈகையாளன்”விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor