இந்தியாவில் காணப்படும் அரிய வகை பறவை இனங்களில் ஒன்றான கான மயில் இனம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
இந்தியாவில் மொத்தமே 150 கான மயில்கள்தான் உள்ளன.
இந்நிலையில் கான மயில் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு கான மயில் மீட்பு திட்டத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக கான மயில்களில் செயற்கை கருவூட்டல் செய்வது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதன்படி, 3 வயதான ஆண் கான மயிலொன்றின் விந்தணுவை எடுத்து 5 வயதான பெண் கான மயிலுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர்.
இதையடுத்து கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி பெண் கான மயில் முட்டையிட்டது.
அம் முட்டையிலிருந்து கடந்த ஒக்டேபர் 16 ஆம் திகதி குஞ்சு வெளியில் வந்துள்ளது.
செயற்கை கருவூட்டல் மூலம் கான மயில் குஞ்சு பொரித்திருப்பது இதுவே முதல் முறை என ஜெய்சால்மார் வன பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்