ரணில் நரிதான்: பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

அனுர அரசில் முக்கிய பதவிகளை பெற்றுள்ள சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே போலி விசாரணை குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்திருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் அவ்விரு புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க புதிய குழுவொன்றை நியமித்தமை சந்தேகத்திற்குரியது என்றும் கர்தினால் ரஞ்சித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை திசை திருப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகத் தெரிகிறதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

அனுர அரசிற்கு தர்மசங்கடத்தை தரும் வகையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கோத்தபாயவை அம்பலப்படுத்திய அதிகாரிகள் பழிவாங்கும் வகையில் முன்னதாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin