கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் அவர்கள் இந்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்தமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகழ்வு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கண்டி, பல்லேகல, நத்தரன்பொத, அதுல்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் குறித்த சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.