சீனப் பிரதமர் வியட்நாமில்

சீனப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார்.

தென் சீனக் கடலில் பதற்றம் மிகுந்துள்ள வேளையில் அவர் அங்கு போயிருக்கிறார்.
விளம்பரம்

வியட்நாமின் முன்னணித் தலைவர்கள் சிலர் அவ்வப்போது சீனா சென்று திரும்பிய பிறகு திரு லீ யின் பயணம் அமைகிறது.

சீனப் பிரதமராகத் திரு லீ முதன்முறை ஹனோய் சென்றுள்ளார்.

வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்னுடன் (Pham Minh Chinh) திரு லி இன்று (13 அக்டோபர்) இருதரப்பு உறவு குறித்துப் பேசுவார்.

நேற்று (12 அக்டோபர்) அவர் வியட்நாம் அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

இருநாட்டுக்கும் நெடுங்காலமாகக் கடல்துறை முரண்பாடு நீடிக்கிறது.
விளம்பரம்

இருப்பினும் தற்காப்பு, பாதுகாப்புச் செயல்முறைகளை வலுப்படுத்தத் தலைவர்கள் உறுதியளித்தனர்.

வியட்நாம் மீனவர்களும் சீனக் கடலோரக் காவற்படையினரும் அண்மையில் நேரடியாக மோதிக் கொண்டனர்.

அது குறித்து இன்று தலைவர்கள் கலந்துரையாடக்கூடும்.

Recommended For You

About the Author: admin