சீனாவைச் சேர்ந்தப் பெய் ஹைச்சங் (Pei Haozheng) என்ற கலைஞர் ஒரே தாளில் 108 மீட்டர் நீளச் சுருளை வெட்டிப் புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார்.
அவர் அந்தச் சுருளை வைத்து ஓர் அழகிய கலைப் படைப்பையும் உருவாக்கினார்.
பெய், சிறு வயது முதல் ஒரிகாமி (origami) கலையில் ஈடுபாடு கொண்டவர்.
ஒரே தாளை வைத்து பல வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்கும் சாத்தியத்தை எண்ணி அவர் வியந்தார்.
எனவே ஒரே தாளை எந்த அளவுக்கு உருமாற்ற முடியும் என்று ஆராய முனைந்தார்.
முன்தயாரிப்புப் பணி, பயிற்சிக் காலம், கடைசியில் சுருளைக் கொண்டு கலைப்படைப்பை உருவாக்குவது என்று மொத்தம் ஓராண்டு பிடித்தது.
ஒரு தாளை மெலிதாக வெட்டி 2.75 மீட்டர் நீளம் கொண்டு வந்தாலே புதிய உலகச் சாதனைதான்.
விளம்பரம்
ஆனால் அவர் 108 மீட்டர் சுருளை உருவாக்கினார்.
மனம் வைத்தால் யாரும் தங்களுக்குப் பிடித்த எந்தத் துறையிலும் உலகச் சாதனை படைக்க முடியும் என்று நம்பிக்கை தருகிறார் பெய்.
முடியாது என்று நினைப்பது பொய்.