அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), அதிபர் பொறுப்பை நிறைவேற்றத் தேவையான உடல், மனவுறுதியுடன் இருப்பதாக அவருடைய மருத்துவர் சான்றளித்துள்ளார்.
அடுத்த மாதம் (நவம்பர்) ஐந்தாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்.
விளம்பரம்
ஜனநாயகக் கட்சியின் திருவாட்டி ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
திருவாட்டி ஹாரிஸ் மருத்துவச் சான்றை வெளியிட்டிருப்பது திரு டிரம்ப்பும் அவ்வாறு செய்ய வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் திருவாட்டி ஹாரிஸ் சற்று முன்னணியில் இருக்கிறார்.
ஆனால் முக்கியமான மாநிலங்களில் திருவாட்டி ஹாரிஸுக்கும் திரு டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நீடிக்கிறது.