சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
சஹாரா பாலைவனம் உலகின் வறண்ட பாலைவனமாக அறியப்படுகிறது.
சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிது.
இந்நிலையில், அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய காட்சிகள் கொண்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் இது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.



