கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி பேராசிரியர் ஜெயந்தில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரசு திணைக்களங்களின் அரசு சேவையாளர்களுக்கு தொற்றாநோய்கள் பரவாது இருப்பதற்காக உடல் பரிசோதனை செய்வதற்குரிய வாழ்வியல் ஆரோக்கிய நிலையம் ரூ.65 மில்லியன் செலவிலும், பொதுச் சுகாதார ஆய்வுக் கூடம் சுமார் ரூ.50 மில்லியன் செலவிலும் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மாதுக்களின் விரிவுரைகளுக்கு பயன்படுத்துவதற்கான கற்கை மண்டபமும் சுமார் ரூ.80 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது .
இந்த தரம் வாய்ந்த சுகாதார கட்டட நிலையங்களை புதிய ஆளுநர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவரீதியாக திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் ஆர். எம்.எல். ரத்நாயக்க ஆளுநரின் செயலாளர் ஏ. மத நாயக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலா ளர் எஸ். சிவலிங்கம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர் ஏ .கொஸ்தா உட்பட பல பிரமுகர்களும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட புதிய ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக் களத்தின் பணிகள் இலகுவாக பொதுமக்களை சென்றடைவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை சிறப்பாக செயற்படுத்துவதற்கு சுகாதார சேவையின் பணியாளர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த வகையில் எதிர்காலத்தில் சில ஆய்வு நடவடிக்கைகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.