கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த காணி குறுகிய கால பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரை அமைச்சின் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக விவசாயிகளுக்கு அவசியமான வாய்ப்புக்களை வழங்க முடியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

