கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த பெறுமதி இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் பெறுமதி ஒரு சந்தர்ப்பத்தில் 75.15 அமெரிக்க சதங்களாக காணப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் பதிவான மிக குறைந்த தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி வீதங்களை மத்திய வங்கி உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய பெறுமதியின் பிரகாரம் 1.33 கனேடிய டொலர்களாக காணப்படுகின்றது.
கனேடிய டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.