நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை…”- ரோஸியின் பதில்

நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை…”- கார் பிரச்சினைக்கு ரோஸியின் பதில்

தன் மீது தேர்தல் காலங்களிலும் சரி, ஏனைய சமயங்களிலும் சரி ஊடகங்கள் காலத்திற்கு காலம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது புதிதல்ல. இப்போது வாகன குற்றச்சாட்டு குறித்து இந்நாட்களில் தான் அதிகளவில் சமூக ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதாக முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தொடந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. கடந்த ஆண்டு என்னிடம் கொடுக்க கார் மிகவும் பழுதடைந்த வாகனம்.
எனக்கு எட்டு வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கொடுக்கப்பட்டன, பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆன பின்பு இந்த குறிப்பிட்ட வாகனமே எனக்கு வழங்கப்பட்டது. கூடிய காலம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் என்பதால் இதனை நான் வேண்டாம் என்றேன் ஆனாலும் வேறொரு வாகனம் வழங்கப்படும் வரை இதனை பாவிக்க கூறினார்கள்.

இங்கு குறிப்பிட்டு சொல்லும் Porsche ரக வாகனம் மிகவும் பழுதடைந்த வாகனம், முன் கதவுகளில் இருந்து தண்ணீர் கசிந்த நிலையிலேயே நான் பாவித்தேன். எரிபொருள் செலவு மிக மிக அதிகம்.

வாகனம் ஒன்று கிடைக்கும் வரையில் இந்த வாகனத்தை வைத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டது.

இது என் பெயரில் வாங்கிய கார் அல்ல, அரசு கொடுத்த வாகனம், இந்த வாகனங்களை மட்டும் குறிவைத்து என்மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

நான் செய்த வேலைகள் கொழும்பு மக்களுக்குத் தெரியும். ஊடகங்கள் தொடர்ந்து என்னை அவதூறாகப் பேசி வருகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுபற்றியும் மக்கள் அறிந்து கொள்ளலாம்.

நான் என் வாழ்நாளில் மக்களிடம் இருந்து ஐந்து காசுகளை கூட வாங்கியது இல்லை…”

Recommended For You

About the Author: admin