இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது

இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது

பலஸ்தீனம் – இஸ்ரேல், லெபனான் – இஸ்ரேல் என இருந்த போர் தற்போது ஈரான் – இஸ்ரேல் இடையேயான போராக மாறி இருக்கிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹெனியே, ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்துக்கு பழிக்குப் பழியாக இந்த தாக்குதல் தொடரும் என எச்சரித்து இருக்கிறது ஈரான்.

காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து காசாவுக்கு ஆதரவாக லெபனானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இஸ்ரேலை நோக்கி தாக்குதலை தொடுத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏரளாமனோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கியது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டார். அதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது.

ஹசன் நஸ்ரலாவின் மரணம் மத்திய கிழக்கு பகுதியில் பதட்டமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் ஈரான் ராணுவ தளபதியான அப்பாஸ் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் வான் பரப்பில் நட்சத்திரங்கள் போல ஏவுகணைகள் பறந்து வந்து அந்நாட்டில் விழுந்தது. நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது.

டெல் அபி அருகே மர்ம நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதற்கு அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் வான் பரப்பை ஈரான் ஏவுகணைகள் சூழ்ந்தன. அதே நேரத்தில் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அயர்ன் டோம், ஒரு சில ஏவுகணைகளை அழித்த போதும், சில ஏவுகணைகளை திட்டமிட்டபடி இலக்குகளை தாக்கி அழித்தன.

வானில் பட்டாசு போல வெடித்துச் சிறிய ஏவுகணைகளால் உயிரிழப்பு இல்லை என்று, சிலருக்கு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் அறிவித்தது. மேலும் ஈரான் தேவையில்லாமல் இஸ்ரேலை சீண்டி விட்டதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல் நடத்தினால், அதனை எதிர்கொள்ள ஈரான் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலை கண்டு எந்த காலத்திலும் ஈரான் அஞ்சாது. தேய்ந்து போன யூத ஆட்சியாளர்களுக்கு, ஈரான் தந்த அடி மிகக் கடுமையானதாக அதிக வலியை தரக்கூடியதாக இருக்கும் என பதிலடி கொடுத்தது. மேலும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரின் மரணத்திற்கு பழிக்குப் பலியாக இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin