கமலா ஹாரிஸூக்கு 66 சதவீதமானோர் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது.

ஆளும் கட்சி சார்பாக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் இருவரும் போட்டியிடுகின்றனர்.

கமலா, ட்ரம்ப் இரு தரப்பினருமே தங்கள் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரம் காட்டு காட்டி வருகின்றனர்.

அதன்படி, அண்மையில் இருவரும் தொலைக்காட்சியில் நேரடி விவாதத்திலும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரில் மக்கள் மத்தியில் யாருக்கு கூடுதல் செல்வாக்கு உள்ளது என்பதை பரிசீலிக்க அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.

ஏற்கனவே நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னணி வகித்திருந்தார்.

அதன்படி சிகாகோ பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்ப்பை விட கமலா ஹாரிஸ் 38 புள்ளிகள் அதிகமாக பெற்று முன்னணியில் உள்ளார்.

ஆசிய மற்றும் அமெரிக்க வாக்காளர்களிடையே கமலா ஹாரிஸ் 38 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார்.

ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதமானோர் கமலா ஹாரிஸூக்கும் 28 சதவீதமானோர் ட்ரம்புக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் எதுவித முடிவுக்கும் வராதவர்கள் 6 சதவீதமானவர்கள்.

இவ்வாறிருக்க இந்த ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டால், இதற்குப் பின் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin