ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய முக்கிய தலைவரை காணவில்லை

காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் போன அவரை கண்டுபிடிக்க இஸ்ரேலும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாஹ்யா சின்வார் நீண்ட காலமாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான், ஹாரெட்ஸ், மாரிவ் மற்றும் வாலா போன்ற முக்கிய இஸ்ரேலிய ஒலிபரப்பாளர் மற்றும் IDF இராணுவ புலனாய்வு இயக்குநரகம் போன்ற செய்திகள் சின்வார் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளன.

ஆனால் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக ஷின் பெட் நிறுவனம் நம்புவதாகவும் ஒரு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, காசா பகுதியின் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் தலைவர், அக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.

சின்வார் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதிகளில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளது, ஆனால் அவர் காயமடைந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin