இலங்கைக்கு 22.83 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் தெரிவித்தார்.

இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விவசாய உணவு பொருட்கள் மேம்படுத்தல்
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 முதல் 2023 வரையிலான 8 வருட கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும், காலநிலை மாற்றம், எரிசக்தி முகாமைத்துவம் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அபிவிருத்திக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் விவசாய உணவு பொருட்களை மேம்படுத்துவதற்காக 11 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor