நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசாரணைக் குழு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.

ஏறக்குறைய முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது சொத்து பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லையென நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 67 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு சட்டத்தின்படி, சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் விதிப்பதற்கு அதிகாரம் உண்டு.

Recommended For You

About the Author: admin