தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடு:

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கும் உள்ளதாகவும் தேவைக்கேற்ப, நிதித் தொகையை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின்படி, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால், அந்தப் பணத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தபால், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்புக்கான செலவுகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும், தேவைகளுக்கேற்ப உரிய நிதியை விடுவிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக அச்சகத்தின் தலைவர் கங்கா கல்பானி லியனகே தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகை குறைக்கப்படலாம் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin