அமெரிக்க ஜனாதிபதிக்கு கோவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் அவர் இரத்து செய்துள்ளார்.

நோய் அறிகுறி தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிகிச்சைப் பெற்றுவரும் அவர், டெலாவேரின் ரெஹோபோத்தில் உள்ள அவரது கடற்கரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடும் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகின்றார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி பைடன் நேர்மறை சோதனை செய்துக்கொண்டதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரீன் ஜீன்-பியர் கூறினார்.

தனிப்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்” என்றும் ஜீன்-பியர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பைடன் பாக்ஸ்லோவிட் என்ற கோவிட் மருந்தைப் பெற்றுள்ளதாகவும், தனது முதல் டோஸை எடுத்துவிட்டார் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவரது அறிகுறிகள் லேசானவை, அவரது சுவாச விகிதம் இயல்பானது, அவரது வெப்பநிலை இயல்பானது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin