செலன்ஸ்கியை ”புடின்” என அழைத்த பைடன்

அமெரிக்காவின் வோஷிங்டனில் இடம்பெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “ஜனாதிபதி புடின்” என்று வார்த்தை தடுமாறியுள்ளார்.

எவ்வாறாயினும் வார்த்தை தடுமாறியதாக குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னர் அவர் அந்த விடயத்தை சாமர்த்தியமாக கையாண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அந்தப் பெயரை தற்போது உக்ரெய்னுக்கு ஜனாதிபதிக்கு வழங்க விரும்புகிறேன் அவருக்கு அந்தளவு தைரியம் உள்ளது” என்றார்.

மேலும் செலென்ஸ்கியைப் பார்த்து “ இவர் ஜனாதிபதி புடின். ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தோற்கடிக்கப் போகிறார்,” என்று பைடன் கூறியுள்ளார்.

பைடனின் இவ்வாறானதொரு அறிமுகத்தை சிரித்த முகத்துடன் செலென்ஸ்கி சாமர்த்தியமாக கையாண்டதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாட்லட் ட்ரம்ப் இடையேயான விவாதத்தின் போது பைடன் வார்த்தை தடுமாறினார்.

பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியற்றவர் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

Recommended For You

About the Author: admin