விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் விடுதலை

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே 5 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து லண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin