இனி உப்பு, மிளகு இல்லை: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் ‘economy class’ பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, பயணிகள் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரம் வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

எனினும், ‘economy class’ இல் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் மிளகு மற்றும் உப்பு பொதிகளை நிறுத்தியுள்ள பின்னணியில் குறித்த இரு பொருட்களையும் ‘Bussiness Class’ இல் பயணிப்பவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உள்ள கறுப்பு மிளகில் அதிக ‘பைப்பரீன்‘ உள்ளடங்கும் நிலையில் ஏனைய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுடன் ஒப்பிடும் போது இது அதிக தரம் கொண்டதாக உள்ளது.

‘பைப்பரீன்‘ என்பது மிளகில் சற்று காரமான சுவையை வழங்க பயன்படும் கலவை ஆகும்.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை அவர்களின் விமான சேவையின் இலட்சினை பொறுத்திய சிறிய பொதிகளில் வழங்கியிருந்தாலும் ‘economy class’ இல் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் மிளகு மற்றும் உப்பு பொதிகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

‘economy class’ இல் பயணிக்கும் பயணிகளில் பெரும்பாலானோர் உப்பு மற்றும் மிளகு பயன்படுத்துவது அரிது என உள்ளக ஆய்வில் தெரியவந்ததாகவும் அவ்வாறு பயன்படுத்தாத பொதிகளை நீக்க வேண்டியுள்ளதே இதற்கான காரணம் எனவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin