வட கொரியாவுடன் இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்த தென் கொரியா

வட கொரியாவிலிருந்து பலூன்களில் குப்பைகளை தென் கொரியாவுக்கு அனுப்பியதன் பின்னர் வட கொரியாவுடனான இராணுவ ஒப்பந்தங்களை இரத்து செய்ய தென் கொரியா தீர்மானித்துள்ளது.

எனினும், தென் கொரியாவின் இராணுவ முயற்சிகளை மீள ஆரம்பிப்பது வட கொரியாவின் இந்த அமைதியின்மைக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரத்தில் வட கொரியா, தென் கொரியாவுக்கு உரம், சிகரட் துண்டுகள் , துணி துண்டங்கள் மற்றும் காகிதங்கள் உள்ளடங்கிய குப்பைகள் நிறைந்த பலூனை அனுப்பியதன் பின்னர் இரு நாடுகளிடையே நிலவும் விரிசல் மேலும் தலைதூக்கியது.

இந்நிலையில், 2018 கொரிய நாடுகளுக்கிடையேயான நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது குறித்து முன்மொழிவு நேற்று (04) தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

வட கொரியாவுக்கு அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தென் கொரியா நாட்டினுள் கடந்த 28ஆம் திகதி முதல் 29ஆம் திகதி காலை வரையில் 150க்கும் அதிகமான பலூன்கள் குப்பைகளுடன் வட கொரியாவிலிருந்து வந்ததை தென் கொரிய இராணுவம் அவதானித்துள்ளது.

இந்த செயல் வட கொரியா அதன் தெற்கு அயல் நாடுகளுடன் மோதுவதற்கான புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ‘வட கொரியாவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுவதாகவும், நமது குடிமக்களின் பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்துவதாகவும் உள்ளது, வட கொரியாவின் மனிதாபிமற்ற மற்றும் கீழ்நிலை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம்‘ என தென் கொரியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin