ஒரு காலத்தில் உலகின் மிக அழகான பகுதியாக அறியப்பட்ட பிரான்ஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ் எவனியூ பொதுவாக இன்று உள்ளூர் மக்களினால் புறக்கணிக்கப்படுகிறது.
இந்த எவனியூ மிகவும் சத்தமாகவும், மாசுபாடானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே பாரிஸ்வாசிகள் இங்கு உலாவர விரும்புவதில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையினை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இரண்டு கிலோமீட்டர் கொண்ட எவனியூவில் மேலதிகமாக 13 வீதத்தை பாதசாரிகளுக்காக ஒதுக்குவதற்கும், சைக்கிள் பாதையின் அகலத்தை இரட்டிப்பாக்குவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கார்களுக்கு ஆறு வழிகளுக்குப் பதிலாக நான்கு வீதிகளை பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவென்யூவின் நீளத்திற்கு இருக்கைகள், நீரூற்றுகள் மற்றும் பொது மலசலகூடங்களை அமைப்பதற்கும், 150 சதுர மீட்டருக்கு சமமான இடத்தை ஓய்வெடுக்கும் இடமாக மாற்றுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களைக் கவரும் வகையில் ஆண்டு முழுவதும் கச்சேரிகள், சந்தைகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஒழுங்கமைக்க கோரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென தெரிவிக்கப்படுகிறது.