ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவிற்கு இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ஆஷா டி வோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உலகளாவிய ரீதியில் நியமிக்கப்பட்டுள்ள 07 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
அறிவியல் மற்றும் தொழினுட்பத்தில் முன்னேற்றங்கள் குறித்து பொதுச்செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்களுக்கு அறிவியல் ஆலோசனைக் குழு ஆலோசனை வழங்குகிறது
நெறிமுறை மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுவதை குறைக்கவும் ஆலோசனைக் குழு பெரிதும் துணை புரிகிறதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது நியனம் குறித்து ஆஷா டி வோஸ் இவ்வாறு பெருமிதம் கொள்கிறார்,
“ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவில் அமர்ந்திருக்கும் முதல் இலங்கையர் என்ற வகையில், பொதுச்செயலாளரின் குழுவினர் கிரகத்தை எப்படிச் சுற்றிப்பார்த்து என்னைக் கண்டுபிடித்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால் எனது அயராத முயற்சிகள் தொடர்பில் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி
நீதியும் சமத்துவமும் தான் இன்று நான் இருக்கும் இடத்தில் என்னைக் காண்பதற்கு காரணம்” என அவர் மனம் திறந்துள்ளார்.