‘மிஸ் பாரிஸ் 2024’ அழகிப் போட்டி: இலங்கை புலம்பெயர் யுவதியான கிளாரா இறுதி சுற்றுக்குத் தகுதி

யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமிழ் யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’ அழகிகள் போட்டியின் இறுதிச் சுற்றிற்குத் தெரிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளாரா 18 வயதுடையவர் எனவும் தான் பிரான்சில் உள்ள Champigny-sur-Marneனில் பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் , இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மஸ்ரீ ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

அவர் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று வரை பிரான்ஸ் மக்கள் வாக்களிக்க முடியும் எனவும் இதில் வெற்றி வெற்றால், “இல் து பிரான்ஸ் போட்டி“க்கு அவர் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அவர் தமிழ் கல்ச்சர் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார் அதில்,

எனது தந்தை புங்குடுதீவைச் சேர்ந்தவர், எனது தாயார் யாழ் நகரைச் சேர்ந்தவர். எனது தந்தை பிரான்ஸ் வருவதற்கு முன் நோர்வே சென்று பின்னர் மீண்டும் இலங்கை சென்றார்.

நான் “மிஸ் பாரிஸ் 2024” என்ற போட்டியில் பங்கேற்கிறேன், மேலும் ஒரு மாடலிங் ஏஜென்சியுடன் கையெழுத்திடப் போகிறேன்.

அந்த போட்டிக்கு நீங்கள் எனக்கு வாக்களித்தால் மிகவும் உதவியாக இருக்கும். எனது ஐஜி (கிளாரா_பத்மஸ்ரீ) மூலம் வாக்களிப்பதற்கான விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

நான் ஓடுவதையும் கலைகளை உருவாக்குவதையும் விரும்புகிறேன், மேலும் எனது கலாச்சாரத்தைத் தழுவ விரும்புகிறேன். பாரிஸில் LA Chapelle என்று ஒரு இடம் உள்ளது.

இது நம் தமிழர் உணவு மற்றும் மசாலா பொருட்களை வாங்குவதற்கும் சமூகத்துடன் இணைந்திருக்கக் கூடிய வழிகளைக் கண்டறியும் ஒரு இடமாகவும் உள்ளது.

நான் சிறுவயதில் இருந்தபோது, ​​​​எங்கள் மக்களின் பிரதிநிதித்துவத்தை இங்கு அதிகம் காணவில்லை, அதை மாற்ற வேண்டும் என்று நான் வளர்ந்தேன். நான் மிஸ் பாரிஸ் போட்டியில் வெற்றி பெற்றால், நான் மிஸ் இலே-டி பிரான்ஸ் போட்டியிலும் பங்கேற்பேன், அதில் நான் வெற்றி பெற்றால், நான் ”மிஸ் பிரான்ஸ்” போட்டியிலும் பங்கேற்பேன்! என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin