தொழிற் கட்சி உறுப்பினர் டயான் அபோட் மீதான விசாரணை?: தேர்தல் வாய்ப்பை இழப்பாரா?

பிரித்தானியாவில் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் கறுப்பின மூத்த உறுப்பினர் டயான் அபோட் தெரிவித்துள்ளார்.

யூதர்கள், ஐரிஷ் மற்றும் பயணிகள் ‘வாழ்நாள் முழுவதும்’ இனவெறியை எதிர்கொள்வதில்லை என்று கூறிய பின்னர், முன்னாள் நிழல் உள்துறை செயலாளர் ஏப்ரல் 2023இல் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிரான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதனால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.

ஆனால் ஹாக்னி நார்த் மற்றும் ஸ்டோக் நியூவிங்டன் தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 7ஆம் திகதி சட்டப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் முடிவதற்குள், அடுத்த வாரம் அவர்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கூட்டத்திற்கு முன்னதாக, மீதமுள்ள வேட்பாளர்களைக் கட்சி தற்போது தெரிவு செய்துள்ளது.

அவரது நடத்தை குறித்து பல மாதகால விசாரணைக்குப் பின்னர் இன்று புதன்கிழமை மீண்டும் அவருக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலில் கட்சி வேட்பாளராக மீண்டும் நிற்பதற்கு அனுமதிக்கப்படும் வாய்ப்பு இல்லையென பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண்ணான அபோட், 1987ஆம் ஆண்டு முதல் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு எதிரான கட்சியில் சுயேட்சையாக போட்டியிடுவதா அல்லது தனது நீண்ட நாடாளுமன்ற வாழ்க்கையை முடித்துக்கொள்வதா என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

யூத மக்களுக்கு எதிரான இனவெறியைக் குறைப்பதற்கு எழுதப்பட்ட கடிதத்தினால், கடந்த ஆண்டு கட்சியிலிருந்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

யூதர்கள், ஜிப்சிகள், ரோமாக்கள் போன்ற சிறுபான்மைக் குழுக்களுக்கம் சிவப்பு நிற முடியைக் கொண்டவர்களுக்கும் இடையில் பாரபட்சம் இருப்பதாகவும் இவர் வாதிட்டிருந்தார்.

அபோட் தான் கூறிய கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோரினாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உறுப்புரிமையை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin