மீன் தட்டுப்பாடு: சீரற்ற காலநிலையால் விலைகளும் அதிகரிப்பு

சீறற்ற காலநிலை காரணமாக மீன்பிடி அண்ணளவாக குறைந்துள்ளது. இதனால், உள்ளூர் சந்தையில் மீன் மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் அதிகார சபை (NCF) தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன்பிடிக்கு மீனவர்கள் செல்வதை முற்றிலும் தவிர்த்துள்ளனர். இதனால் சந்தையில் மீன் பற்றாக்குறை காணப்படுவதுடன் விலையும் உயர்ந்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை வெளியில் செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உள்ளூர் மீன் சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்று உள்ளூர் பண்ணைகளில் விலை சுமார் 50 ரூபா வரை உயர்வாக காணப்பட்டதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி விலைகளும் அதிகரிப்பு

மேலும், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ புதிய கோழிக்கறியின் மொத்த விலை ரூ. 1,080ற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில்,

ஃப்ரெஷ் சிக்கன் – ரூ.1,200 ,கோழி (தோல் அகற்றியது) – ரூ.1,100, உறைந்த கோழி – ரூ.1,100, கறி கோழி – ரூ. 1,100, ஹபேட்(Habbed) – ரூ.1,400, கட் ஆஃப் – ரூ. 600, ஆட்டிறைச்சி – ரூ.3,300, மாட்டிறைச்சி – ரூ.2,500 ஆகிய விலைகளின அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin