2017ஆம் ஆண்டு முதல் 2020 வரை அமெரிக்காவின் ஜனபதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், 2020இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
ஜனாதிபதி பதவியை இழந்த ட்ரம்ப் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவர் ரியல் எஸ்டேட், ஹோட்டல் என பல தொழில்களை செய்து வருகின்றபோதும் இவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ள அவருக்கு சுமார் 800 கோடி ரூபாய் தேவைப்படும் என அவரது சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த பண நெருக்கடியை சமாளிக்க தனக்கு விருப்பமான சுமார் 83 கோடி மதிப்புடைய செஸ்னா ஜெட் விமானத்தை ஈரானிய அமெரிக்க கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மெஹர்தாத் மொயதியிடம் ட்ரம்ப் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ட்ரம்பின் பிரசாரத்துக்காக மொயதி சுமார் 2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியவர் எனக் குறிப்பிடத்தக்கது.