கனடாவில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரான்டோ நகரை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்களுக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் 16 பேரை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் திட்டமிட்ட குற்ற நடவடிக்கை என பீல் பிராந்திய காவல்துறையினர் தலைவர் நிசான் துரையப்பா தெரிவித்தார்.
இந்தச் திருட்டு சம்பவம் தொடர்பில் Project Odyssey என பெயரிடப்பட்ட விசாரணை October 2023இல் ஆரம்பிக்கப்பட்டதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் இதுவரை மொத்தம் 322 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (27) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கி திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு 33.2 மில்லியன் டொலர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விசாரணையில் தொடர்புடைய 26 சந்தேக நபர்களில், 14 பேர் திருட்டு தொடர்பான குற்றங்களுக்காக ஏற்கனவே கைதானவர்கள் என தெரியவருகிறது.