சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த போது தனது குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் ருபாசிங் லியனகே உதேஷிகா அயோமி ஜெயலத் மற்றும் அவரது காதலன் முனசிங்க சுதேஷ் டில்ஷான் டி சொய்சா ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி டி சொய்சாவின் வீட்டில் வைத்து ஜயலத் தனது குழந்தையை கருக்கலைப்பதற்காக போதைப்பொருளை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களான 30 வயதுடைய இருவரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மார்ச் மாத இறுதியில் தோச்சிகி ப்ரிபெக்சரில் உள்ள மகப்பேறு மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்ய ஜெயலத் சென்றிருந்தார், ஆனால் ஜப்பானின் தாய்வழி சுகாதார சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டியதால் மருத்துவர் மறுத்துவிட்டார்.
தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.