சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க பொதுஜன பெரமுன திட்டம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பட்டை விரைவில் அறிவிப்பதாகவும் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச இராஜபக்ஷ கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் குழப்பத்தில் உள்ளது.

அதேநேரம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதாக அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒப்பீட்டளவில் நீண்ட கால ஒருமித்த கருத்தை விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin