வியட்நாம் தீ விபத்து: 14 பேர் பலி – விசாரணை ஆரம்பம்

வியட்நாம் – மத்திய ஹனோய் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வியட்நாமின் தலைநகரில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பிரதேசமான காவ் கியே மாவட்டத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து புகை மற்றும் நச்சு வாயு வெளியேறிய நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீட்பு பணியாளர்கள் குடியிருப்பின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்குண்டிருந்த சிலரைக் காப்பாற்றியுள்ளனர்.

தீவிபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த கட்டிடத்தின் முற்றம் மின்சார சைக்கிள்களை விற்பனை செய்வதற்கும் பழுதுபார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பெருமளவான மோட்டார் சைக்கிள்கள், மின்சார சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹனோய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin