அமெரிக்காவில் H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இன்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மிச்சிகன் மாநிலத்தில் பால் பண்ணையாளர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் கடந்த மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் கண்டறியப்பட்டார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபரும் பால் பண்ணையில் பணியாற்றுபவர் என தெரியவருகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.