மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை (22) நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் கலந்துகொள்வற்காக இன்று (21) இரவு புறப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் கடந்த 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் ஆறு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஐந்து நாட்களுக்கு தேசிய துக்கதினத்தை அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகிலுள்ள முக்கிய நகரமான தப்ரிசு நகரில் இன்று ஆரம்பமான இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.