சூர்யகாந்தி விதையை உட்கொள்ளலாமா அப்படி உட்கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?

இந்த விதைகள் ருசியானவை என்பதால் ஆரோக்கியமான சிற்றுண்டி என்பதாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது.

இது தோலில் தடிப்புகளை ஏற்படுத்தும். மேலும் செலினியம் புற்றுநோயைத் தடுக்கும் .

அதேசமயத்தில் அதிகமாக உட்கொள்ளும் போது, நாள்பட்ட சோர்வு, மனநலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்டவற்றிற்கான அறிகுறிகளை உருவாக்கலாம்.

பக்கவிளைவுகள்

சூரியகாந்தி விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் இரத்தத்தில் சோடியத்தின் அளவை உயர்த்தி உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் சோடியம் அளவுக்கு குறைவாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் இந்த விதைகள் சாப்பிடும் போது கவனம் வேண்டும்.

இதில் அதிக கலோரிகள் உள்ளன. நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை உங்கள் உடலால் பயன்படுத்த முடியாதபோது அது அவற்றை கொழுப்பாக சேமிப்பதால் உடல் எடை கூடுகிறது.

ஒரே நேரத்தில் அதிக அளவில் சூரியகாந்தி விதைகளை உண்பதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

.​சூரியகாந்தி விதை ஒவ்வாமை உள்ளவர்கள் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சூரிய காந்தி விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை நீங்கள் உணர குறைந்தது 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணிநேரம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு சாப்பிட்டு அடுத்த நாள் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருப்பார்கள்.

அதன்பின்னரே வெளியில் அழற்சிக்கான விளைவுகள் தெரிய ஆரம்பிக்கும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

நீங்கள் விதைகளை மேல் உள்ள ஓட்டுடன் சாப்பிடுவதால் செரிமானத்திற்கு கடுமையாக இருக்கும்.

அதேபோல அதிகமாக விதைகளை எடுத்துக் கொண்டால் வாந்தி கூட உண்டாக்கலாம்.

சிலர் சூரியகாந்தி விதைகளை உட்கொண்டால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வாயில் அரிப்பு, தோல் வெடிப்பு, புண்கள், வாந்தி போன்றவை ஏற்படலாம்.

​சூரியகாந்தி விதைகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
இந்த விதைகளை நீங்கள் பொரியலில் சேர்த்து வரலாம் சிக்கன் சாலட்டுகளில் சேர்த்து கிளறி பயன்படுத்தலாம் .

வதக்கிய காய்கறிகளில் சேர்த்து இதை பயன்படுத்தலாம்.

பர்கர் போன்றவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

சூரியகாந்தி எண்ணெய்களாக பயன்படுத்தலாம் ரொட்டி மற்றும் மஃபின்கள் போன்ற வேகவைத்த பொருட்களில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

Recommended For You

About the Author: webeditor