தோனிக்கு விரைவில் கோவில் கட்டப்படும் ராயுடு

இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்குகளை கருத்தில் கொண்டு தோனிக்கு சென்னையில் கோயில்கள் கட்டப்படும் என்று அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்றைய தினம் விளையாடிய சென்னை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேற எஞ்சியிருக்கும் ஒருப் போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அவ்வாறு இல்லையெனில் தோனி விளையாடும் கடைசிப் போட்டியாக அது மாறிவிடும்.

தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், குஷ்பு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுக்கு அவர்களின் ரசிகர்கள் கோயில் கட்டி வழிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா மற்றும் சென்னை ரசிகர்களுக்கு அவர் அளித்த மகிழ்ச்சியை மனதில் வைத்து தோனியும் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று ராயுடு கூறினார்.

“தோனி சென்னையின் கடவுள், வரும் ஆண்டுகளில் அவருக்கு சென்னையில் கோவில் கட்டப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஐந்து ஐபிஎல் கிண்ணங்களை தவிர, இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரையும் வென்றுகொடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக இரண்டு முறை உலகக் கிண்ணத்தையுமு் வென்றுகொடுத்துள்ளார். அவர் அணிக்காக நம்பிக்கை உள்ள ஒருவராக இருந்துள்ளார்.

“அவர் ஒரு புராணக்கதை, எல்லோரும் கூட்டத்தில் கொண்டாடும் ஒருவர். சென்னையில் இதுவே அவரது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்,” என்று ராயுடு மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin