காசாவில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை ரஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
அல்-மவாசியில் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என்று அழைக்கும் பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
மத்திய காசாவில் பல பகுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே இரவில் 24 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்துள்ள தெற்கு நகரைச் சுற்றி இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
காசாவில் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியிருக்கலாமென அமெரிக்கா கூறிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் 80,000 இற்கும் அதிகமானோர் ரஃபாவிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதுடன் திட்டமிட்ட பாரியளவான தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, சுமார் 300,000 பலஸ்தீனியர்கள் அல்-மவாசிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
மனிதாபிமான குழுக்களின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
ஹமாஸ் இயக்கத்தை அழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லையெனவும் எனவும் தொடர்ச்சியான கூறி வருகிறது.