ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று சனிக்கிழமை (11) தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் காணாமற் போயுள்ளனர். இந்நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.