அக்கா கதாபாத்திரம் என்றால் ரூபாய் 20 கோடி! நயன்தாராவின் சம்பளக் கோரிக்கை

முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார்.

தற்சமயம் தமிழில் மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள ‘டாக்சிக்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் ஹீரோயினாக அல்ல. யாஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரூபாய் 20 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் இவர் நடித்த திரைப்படங்களில் ரூபாய் 10 கோடி வரையிலேயே சம்பளம் பெற்று வந்த நயன்தாரா, தனது சம்பளத்தை இருமடங்கு உயர்த்தியுள்ளமை படக்குழுவினரை சிந்திக்க வைத்துள்ளது.

நயன்தாரா கேட்ட சம்பளத்தைக் கொடுத்து அவரை திரைப்படத்தில் நடிக்க வைக்கலாமா? வேண்டாமா? என்ற கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

Recommended For You

About the Author: admin