சந்தையில் விற்கப்படும் மின்கலம் (Battery) மூலம் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்து வெளியிடுகையில்,
இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஆக்சைடு மற்றும் அல்கலைன் பட்டன் மின்கலங்கள் இருப்பதால், குழந்தைகள் அவற்றை விழுங்கலாம், காது அல்லது மூக்கில் வைக்கலாம்.
அத்துடன், இந்த மின்கலங்களை குழந்தைகள் விழுங்கினால், அது மின் வேதியியல் செயல்பாடுகளால் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுக்குழாய் முதல் பகுதி இயற்கையாகவே குறுகலானது, இவற்றை விழுங்கும்போது அதிகபட்ச சேதம் ஏற்படலாம், மேலும் மின்கலங்கள் வயிற்றுக்குள் சென்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
இதனால் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டு உயிரை கூட இழக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் இதுபோன்ற விபத்தில் சிக்கினால், விரைந்து வைத்திசாலைக்கு அழைத்து வரவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறன சந்தர்ப்பங்களில் 10 நிமிடங்களுக்கு இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனை குழந்தைக்கு முதலுதவியாக கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.