“இனி பிரித்தானியா செல்ல முடியாது”: அரசாங்கம் வைத்த செக்

குடியேற்றவாசிகளின் அதிகரித்த வருகை காரணமாக பிரித்தானியா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இதனால் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகை காரணமாக வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பிரித்தானியா அரசாங்கம் பல திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

மிக அண்மையில் கூட புகலிட கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை பாராளுமன்றில் நிறைவேற்றிருந்தது.

கடந்த ஆண்டு (டிசம்பர் மூன்றாம் திகதி) இறுதி பகுதியில் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ‘ஐந்து அம்சத் திட்டத்தை’ பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இதன்படி,

  • பராமரிப்பாளர் விசாவில் பிரித்தானியாவுக்கு வருபவர்கள் இனி குடும்பத்தைச் சார்ந்தவர்களை (குழந்தைகள் அல்லது துணை) அழைத்து வர முடியாது. இந்தச் சட்டம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • திறமையான தொழிலாளர் விசாவிற்கான சம்பளத் தேவை 26,200 பவுண்ட்ஸில் இருந்து 38,700 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஐம்பது வீத அதிகாரிப்பாகும். சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு இந்த உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தச் சட்டம் ஏப்ரல் நான்காம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • பிரித்தானியாவில் தொழிற்துறை பற்றாக்குறை நிலவும் பட்டியலில் உள்ள வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இது வேலை செய்யக்கூடிய தஞ்சம் கோரி வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமும் ஏப்ரல் நான்காம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
  • குடும்ப விசாவில் வரும் ஒருவருக்கு சம்பளத் தேவை 18,600 பவுண்ட்ஸில் 38,700 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையான தொழிலாளர் விசாவிற்கும் அதே சம்பளம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் தங்களின் துணையை பிரித்தானியாவிற்கு அழைத்து வர விரும்புபவர்கள் கொடூரமாகப் பிரிக்கப்படுவதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  • Graduate விசா இங்கிலாந்தின் சிறந்த நலன்களுக்காகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கும், ‘துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு’ நடவடிக்கை எடுப்பதற்கும் ‘மதிப்பாய்வு’ செய்வதற்கான அர்ப்பணிப்பை கொண்டுள்ளது. எனினும், இந்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்தச் சட்டம் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தச் சட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளதன் காரணமாக பிரித்தானியாவிற்கு வருபவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியா மற்றம் இலங்கையில் இருந்தே அதிகளவானவர்கள் பிரித்தானியாவிற்கு வருகைத் தருவதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த ஐந்து அம்சக் கொள்கை இலங்கையர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin